(அகீல் சிஹாப்)
சம்மாந்துறை அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு சி.க.கூ சங்கத்தின் ஏற்பாட்டில் 76வது சுதந்திர தின நிகழ்வும், மர நடுகையும் அதன் தலைவர் ஐ.எம். இப்றாஹிம் தலைமையில் நேற்று சம்மாந்துறை ஜலாலியா ஜூம்மா பள்ளிவாசலில் விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.சி.எம். அஸ்ரப், ரி.எல் டிபாசதுல்லாஹ், அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிறுவனத்தின் முகாமைத்துவ உறுப்பினர்கள், ஊழியர்கள், ஜலாலியா பள்ளிவாசல் நிர்வாகிகள், மத்ரஸா மாணவர்கள், மஹல்லா வாசிகள் என பலர் கலந்து கொண்டனர்.