Ads Area

துபாயில் கொலைக் குற்றம் ஒன்றுக்காக சிறையில் அடைக்கப்பட்ட 5 இந்தியர்கள் 18 வருடங்களின் பின்னர் விடுதலை.

துபாயில் 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியா தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர், அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பிப்ரவரி 20 ஆம் தேதி ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஐந்து பேரும் தங்கள் குடும்பங்களுடன் ஒன்று சேர்ந்துள்ளனர்.


சிவராத்திரி மல்லேஷ், சிவராத்திரி ரவி, கொல்லம் நம்பல்லி, துண்டுகுல லக்ஷ்மன் மற்றும் சிவராத்திரி ஹன்மந்து ஆகிய 5 பேரும் தெலுங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.  இவர்கள் 5 பேரும் துபாயில் கட்டுமானத் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.


2005 ஆம் ஆண்டு துபாயில் இவர்களுக்கும் நேபாள காவலர் ஒருவருக்கும் இடையே வாய்த் தகராறு சண்டை ஏற்பட்டு பின்னர் அது துரதிர்ஷ்டவசமாக கொலையில் முடிந்தது, இதில் நேபாள காவலாளி துரதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த 5 பேரும் நேபாளா காவலாளியை கொலை செய்யும் அளவிற்கு எந்த தவறான நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை, குறித்த மரணமானது தற்செயலாக நடந்ததொன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து துபாய் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. "ஆரம்பத்தில், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டிற்குப் பிறகு, தண்டனை 25 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. 


இவர்களின்  விடுதலைக்காக தெலுங்கானா வளைகுடா என்ஆர்ஐ பிரிவின் கன்வீனர் எஸ்.வி.ரெட்டி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அதற்கான சாத்தியங்கள் தோல்வியிலேயே முடிந்தது. பின்னர் தெலுங்கானா அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், கொலை செய்யப்பட்ட நேபாள காவலாளியின் குடும்பத்தை நேரில் சந்தித்து, ஐந்து பேரையும் விடுவிக்க 'ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ்' பெற்று துபாய் சென்று துபாயில் உள்ள அதிகாரிகளை சந்தித்து அவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது ஐந்து பேரும் கடந்த பிப்ரவரி 18 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 


செய்தி மூலம் - https://www.khaleejtimes.com

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe