நாபீர் பௌண்டேஷனின் சம்மாந்துறை சென்னல் கிராம ஆதரவாளர்களுடன் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு M.நௌசாத் தலைமையில் நேற்று (24) நடைபெற்றது.
இந்நிகழ்வில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் களமிறங்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் கடந்த காலங்களில் நாபீர் பவுண்டேஷன் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், தொடர்ச்சியான அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாபீர் பவுண்டேஷனின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தோடு அதிதிகளாக A.M. அன்வர், A.R.M.றசூல், S.நௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர் நாபீர் பௌண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர், கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பாசக்கவி பாயிஸ் கரீம் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தோடு பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமான பல விடயங்களையும், பொறியியலாளர் உதுமான்கண்டு நபீர் அவர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற மக்கள் ஆதரவு தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்தார்.