Ads Area

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை புளக் ஜே கிளைக் குழுத் தெரிவுக் கூட்டம்.

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு  -02 பிரதேசத்திற்கான கிளைக் குழுத் தெரிவுக் கூட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில்  அண்மையில் இடம்பெற்றது.


இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு -02 கிளைக் குழுத் தலைவராக அஸீஸ் தெரிவு செய்யப்பட்துடன், அதனுடன் 20 பேர் கொண்ட நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு  -02 இளைஞர் அமைப்பின் தலைவர் ஐ.ஏ.ஆகிப் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe