Ads Area

சீனி நோயாளியான நான் நீண்ட காலமாக மருந்து கட்டிக்கொண்டு இருக்கின்றேன் ஆனால் காயம்தான் ஆறுது இல்லை ஏன்?

 CLINIC மக்களின் சஞ்சல கேள்விகள் இவை.


(ஆறா கால் காயம் உள்ளவர்களுக்கு  தயவு செய்து இதை பரப்பவும்)


பிரதானமாக காலில் காயத்துடன் நீண்ட காலமாக காயத்துக்கு மருந்து கட்டிக்கொண்டு வீட்டுக்குள் அடங்கி இருப்போர் தற்போது மிக அதிகம். முக்கியமாக சீனி நோய் உள்ளவர்களிடம்தான் இந்த நிலை அதிகமாக காணப்படுகிறது!.


காயம் ஏன் ஆறுவது இல்லை என்பதை ஆராய முன், காயம் ஏன் சீனி நோயாளிகளில் அதிகமாக ஏற்படுகிறது? என்பதை பார்ப்போம்.


சீனி நோயாளிகளில் 15-25% மானவர்கள் காயத்தை வாழ்நாளில் கட்டாயம் பெறுகின்றனர். பிரதானமாக காலில்தான் காயம் ஏற்படுகின்றது.


இதில் 1/6 பங்கினர் தன் வாழ்நாளில் கால் பகுதிகள் அகற்றப்படும் நிலைக்கு எப்படியாவது தள்ளப்படுகின்றனர் .


இரண்டாவது வெட்டு 1-3 வருடத்துக்குள் மீண்டும் நிகழலாம்!.


 சீனி நோயாளிகளில் ஏன் காயம் சாதாரணமாக உருவாகின்றது?


85% காயம், நமது கால்/பாத உருவமைப்பு, சீனி நோயினால் உருமாறுவதனால்/உருக்குலைவதனால் ஏற்படுகின்றது.


மீதி 15%, நமது வெளி நடத்தைகள்/ செய்கைகள்  மூலம் காலில் ஏற்படுகின்றது. (ஏதாவது பொருள் மூலமாக காயம் ஏற்படுதல்->அடிபடுதல்/வெட்டுதல்/வழுக்குதல்/சுடுதல் போன்றன)


மேல் சொன்ன 85% வீதமான காயங்கள் எவ்வாறு உருவாகிறது?


கட்டுப்படுத்த முடியாத சீனி நோய் உள்ள போது , கால் நரம்புகள் சீனி படிவதினால் செயல் இழக்கின்றன, இதனால் காலில் வியர்வை குறைதல்/நீர்த்தன்மை குறைதல்/உணர்ச்சிகள் இல்லாமல் போகுதல் போன்றன நடக்கின்றன, இதனால் கால்  தோல் வெடிக்கிறது. அதற்குள் கிருமிகள் உள் நுழைகின்றன இதனால் காயம் இன்னும் பெரிதாகின்றது மற்றும் நம் நிறையை தாங்க  பாத உள்ளில் சவ்வினால் ஒன்றாக கட்டி வைக்கப்பட்டிருக்கும் சிறு எலும்புகள், அதன் சவ்வுகள் கரைவதனால் இடம்மாறுகின்றன, இதனால் பாதத்தில் எமது நிறையை ஒழுங்காக தாங்க முடியாமல் உள்காயம்/வெளி புத்துக்கள் உருவாகின்றன (இவ் வெலும்புகளினால் இவை உருவாக்கப்படுகின்றன)உதாரணமாக ஒரு பைக்குள் கற்களை கட்டி வைக்காமல் சும்மா போட்டால் பை அசையும் போது கல்லுகள் அங்காலையும் இங்கா லையும் அசைந்து பையை சேதப்படுத்துவது போல்.


சீனி நோயாளிகளில் காயம் வராமல் எவ்வாறு முற்பாதுகாப்பு பெறலாம்?


1) பட்டினி சீனி நிலையை (FBS) கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் (<130)/சராசரி சீனி நிலையை (HbA1c) 8 குள் வைத்திருத்தல்


2) முகம் பார்ப்பது போல் ஒவ்வொரு நாளும் கண்ணாடியில் காலை/பாதத்தை அவதானித்தல் (காலில் புத்துக்கள்/காயங்கள் தோண்றுகிறதா என்று)


3) சீனி நோயாளிகள் கால் பாத பரிசோதனைகளை (கால் இரத்த குழாய் அடைப்பு/பாத பிரஸ்ஸர் பொய்ண்ட்/பாத உணர்ச்சி நிலை/பாத சிறு எலும்புகளின் நிலை) வருடத்துக்கு ஒரு தடவையாவது செய்து கொள்ளல்.


இதை அநேக நோயாளிகள் செய்வதே இல்லை! தேவை ஏற்பாடின் Scan க்கு ஏற்றவாறு பாதணியை வடிவமைத்து அணிந்து கொள்ளல்- இது பாத உள்காயம், பாத புத்து ஏற்படுவதை தடுக்கும் (Readymade பாதணிகளை அணிய வேண்டாம்-இது கண் செக் பண்ணாமல் கண்ணாடி வாங்கி போடுவது போல் இருக்கும்)- இதை கொழும்பில் செய்து கொள்ளலாம்.


4) வெளி காயங்கள் வராமல் அவதானமாக நடத்தல் (பாதணி அணிதல்/வெளிச்சூழல் பாதுகாப்பாக இருத்தல்)


5) கொலஸ்ட்ரோல் மற்றும் மற்ற மாத்திரைகளை தவறாமல் எடுத்தல் (இரத்த அடைப்பை சீராக்குதல்)


6) நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவு வகைகளை, உணவு சம்பந்தமான வல்லுநர்களை (Dietician) சந்தித்து ஆலோசனைகளை பெறுதல்


இப்போது Topic க்கு வருவோம்!


கால் காயம் வந்துட்டு ஆனால் ஆறுது இல்லை ஏன்?


காயம் ஆறுவதுக்கு (சதை வளருவதற்கு) பின்வரும் 3 செய்கைகள் கட்டாயம் நடக்க வேண்டும்.


1) வளரும் தசை, அழிவது தடை செய்யப்பட வேண்டும்: வெளிக்கிருமி தாக்கம் அல்லது புறத்தாக்கு/ அமுக்கங்கள் காயத்தில் இருக்கக்கூடாது (வளரும் காய தசையை அழித்து விடும்)


2) காயத்தில் தசை வளருதல் தொடற்ச்சியாக நடக்க வேண்டும்:


தசை வளர இரத்த ஓட்டம் காயத்துக்கு தொடற்ச்சியாக இருக்க வேண்டும் (உணவு/கிருமி எதிர்ப்பு சக்திகள்/உட்கொள்ளும் மருந்துகள் காயத்துக்கு கட்டாயம் செல்ல வேண்டும்)


3) காயம் ஆற நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் சரியான உணவு வகைகளை எடுக்க வேண்டும் 


இதில் 1 ஐ தான் நாம் திரும்ப திரும்ப செய்து கொண்டு இருக்கின்றோம்.


எப்படி செய்கிறோம் ?


மருந்துதான் கதி என்று அடிக்கடி மருந்து கட்டிக்கொண்டு! 


(இங்கு எவ்வாறு மருந்து கட்ட வேண்டும் என்பதை சொல்ல வரவில்லை-விளக்கம் நீண்டுவிடும்)


மேல் சொன்ன 2,3 ஐ முற்றிலும் மறந்து விடுகிறோம்!. (2 ஐ பற்றிய எண்ணமே இல்லை!!)


ஒரு பயிர் நல்லா வளர வேண்டும் என்றால் தண்ணீர்/பசளை/கிருமி நாசினி கட்டாயம் தேவை.


கிருமிநாசினி மட்டும் அடித்தால் பயிர் வளருமா?


(இங்கு கிருமிநாசினி=மருந்து கட்டுதல்,


பசளை/தண்ணீர்= இரத்தம்/ உணவு/உட்கொள்ளும் மருந்துகள்


கிருமி மருந்து கட்டுவதனால் ஒரு போதும் தசை வளராது!. கிருமிதான் அழியும் ஆனால் அது தசை வளர இடத்தை ஏற்படுத்தி கொடுக்கலாம்.


 (அநேகமானவர்கள் கிருமி மருந்தினால் தசை வளரும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்!)


தசை வளர இரத்த ஓட்டம் காயம் வரை இருக்க வேண்டும். ஆனால் சீனி நோயளிகளுட்கு சிறு இரத்த குழாய்களில் அடைப்பு எற்பட்டு விடும் இதனால் சதை வளருவதுக்கு உணவு போகாது. இதனால்தான் திரும்ப திரும்ப மருந்து கட்டினாலும் தசை வளராமல் இருப்பது!!


செலவுக்கு மேல் செலவு செய்து மருந்துதான் கட்டுகிறோம் மேலதிக பரிசோதனைகள் ஒன்றும் செய்வது இல்லை (Professional மருந்து கட்டுவர்களை தவிர)


போதாகுறைக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் மருந்து கட்டி பணத்தையும் உடலையும் (வெட்டுப்பட்டு) இழக்கின்றோம்!


இதற்கு என்ன செய்யலாம்?


1) சீனி நிலையை control ல் வைத்திருங்கள் தேவை ஏற்படின் உடனடியாக இன்சுலினுக்கு மாறுங்கள் (காயம் உள்ள நோயாளிகளுட்கு சீனி control ல் இருந்தாலும் குளிசையை விட இன்சுலின் தான் சரியான மருந்து)


2) காயத்தில் உள்ள பழுதான பகுதிகள் கட்டாயம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் (நோயாளி விரும்பா விட்டாலும் உறவினர்கள் வற்புறுத்தி அகற்ற உதவி செய்ய வேண்டும்) இல்லாவிடின் காலின் மீதி பகுதிகளை முற்றாக அகற்ற வேண்டி வரும்!. (பரவுதல் மூலம்)


3) காயம் நல்லா இருக்கு (எந்தவொரு கிருமி தாக்குதலுக்குரிய அடையாளமும் இல்லை) ஆனால் காயம் 2-3மாதமாக ஆறவில்லை எனின் காலை விசேட பரிசோதனைகளுக்கு உட்படுத்துங்கள். (ஸ்கேன்/Droppler study). இதன் போது கால் மேல் பகுதியில் இரத்த அடைப்புகள் இருப்பின் தகுந்த மருத்துவரிடம் (Specialist) காட்டி, தேவை ஏற்படின் அறுவை சிகிச்சைகள் (Vascular surgery) மூலம் சரி படுத்தி கொள்ளுங்கள்-இதன் போது நல்லவொரு முடிவு உங்களுக்கு கிடைக்கும்


(இதை அநேகமானவர்கள் செய்வது இல்லை)


4) புது ஒன்றிணைந்த விசேட சிகிச்சை முறைகள் (Advanced) வெளி வந்துள்ளன. நமது பகுதியில் இல்லாவிடின் வேறு இடங்களுக்கு சென்று செய்து கொள்ளுங்கள். (நன்றாக ஆராய்ந்து போக வேண்டும். இதில் கூடப் பேர், நான் சுகமாக்கிறேன் என்று சொல்லப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர்!)


5) உணவு முறை மாற்றப்பட வேண்டும். சீனியை கூட்டாத ஆனால் காயங்கள் ஆறுவதுக்கான சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவு முறை அவசியம். இதற்கு ஒரு உணவு வல்லுநரை (Dietician) நாடுவது அவசியம்.


6) காயப்பகுதி நன்றாக பாதுகாக்கப்பட வேண்டும் (நடமாட்டம் குறைக்கப்பட வேண்டும்/காயம்/அமுக்கம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்)


கடைசியாக சொல்ல வருவது என்னவென்றால் காயம் ஆறாதற்கு முக்கிய காரணம் காயம் வரை இரத்த ஓட்டயின்மையே ஆகும்.


ஆதலால் சரியான வழியில் சென்று நம்மை சுமக்கும் காலை அவதானமாக பாதுக்காப்போம்!


Tips:


1) கால் காயம் ஆற, குளிசைகளை ஆகக் குறைந்தது 2 கிழமைக்கு மேல் தொடர்ந்து விழுங்கக்கூடாது அல்லது விட்டு விட்டு போட வேண்டும் (இங்கு Antibiotic அவசியமா அல்லது வேலை செய்யாதா என்பதையிட்டு Doctor ன் ஆலோசனையை பெறுங்கள்). தொடர்ச்சியாக போட்டால் பல தீவிர பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு மற்றும் போடும் குளிசைகள் அவ்வளவும் காசும் வீண்!


2) வெளிய சிறியதாக தெரியும் காயங்களை சின்னது என்று நம்ப வேண்டாம். உள்ளுக்குள் பெரிய குகை போல் காயம் இருக்கும் (சீனி காயங்கள் அப்படித்தான்). மருந்து கட்டும் போது உள்ளுக்கு வெட்டி கட்ட வேண்டும் இதுக்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இதை சத்திர சிகிச்சை நிபுணர் மூலம் செய்து கொள்ளுதல் சிறந்தது.


(சின்ன காயத்தை பெரிசாக்கினா கஷ்டம் பின் ஆறுவது கடினம் என்பது பிழையானது. உள்ளே மறைந்து இருக்கும் பெரிய காயம் காலை இழக்கும் வரை இட்டு செல்லும்)


3) காயம் ஆறுவதுக்கு உள ரீதியான  உங்கள் பங்களிப்பும் (Psychological support) அவசியம். இதை கொடுங்கள். கால் பகுதி இழக்கப்பட்டாலும் உங்கள் ஆதரவை கூட்டுங்கள். உங்கள் ஆதரவு கூடும் சமயத்தில் ஆச்சரியமான வெற்றிகள் கிடைக்கக்கூடும்! 


Dr.Mafaz

Fellowship in Diabetes,

PG Diploma in Chest Diseases,

Diploma in General Practice.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe