Ads Area

யானை – மனித மோதல் : தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிக்கான மய்யம் மனுத்தாக்கல்.

 பாறுக் ஷிஹான்.


யானை – மனித மோதலைத்தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின்  தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில்  தெரிவித்தார்.


யானை – மனித மோதலைத்தடுக்க நீதிக்கான மய்யம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நீதிக்கான மய்யத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் கடந்த   புதன்கிழமை (7) இரவு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


குறித்த ஊடக மாநாட்டில் நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயிலுடன் நீதிக்கான மய்யத்தின் பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான், செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் ஆகியோர் இணைந்திருந்தனர்.


 இதன் போது மேலும் தெரிவித்ததாவது


அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேசமானது  யானைகள் வாழ்கின்ற பிராந்தியமல்ல. குறிப்பிட்ட காலங்களில் அம்பாறை மாவட்டத்தினுள் வருகின்ற யானைகள் அம்பாறை மாவட்ட யானைகள் இல்லை. வெளிமாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு யானைகள் இங்கு விடப்படுவதான குற்றச்சாட்டு ஆராயப்பட வேண்டியுள்ளது.


தற்போது இவ்விடயம் பாரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில்   நீண்டகாலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கான தீர்வு பெற்றுக்கொள்ளப்படவில்லை.


இதனால் யானை – மனித மோதலைத்தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனுத்தாக்கலை எமது அமைப்பு மேற்கொண்டுள்ளது.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்று கடந்த திங்கட்கிழமை (05) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 5 வருடங்களில் யானைகளின் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கிழக்கு மாகாணம் இரண்டாவது இடத்தில் காணப்படு கின்றது.


அம்பாறை மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகமாகக் காணப்படுவதாகவும் இதற்குத்தீர்வு வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் திணைக்களம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கெதிராக எமது அமைப்பு குறித்த எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe