Ads Area

12 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொண்டு வந்த வர்த்தகர்கள் விமான நிலையத்தில் கைது.

இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் 12  கோடி ரூபா பெறுமதியான  தங்க நகைகளைக் கொண்டு வந்த வர்த்தகர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இலங்கை சுங்க பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர் . 


கைதான வர்த்தகர்களில் ஒருவர் அம்பலாங்கொடை பகுதியில் வசிக்கும் 60 வயதுடையவர் எனவும் மற்றையவர்   கொழும்பு பம்பலப்பிட்டியில் வசிக்கும் 65 வயதுடையவர் என  தெரியவந்துள்ளது . 


12  கோடி ரூபா பெறுமதியான இந்த தங்க  நகைகள் இவர்களது பயணப்பொதிகளில் வைக்கப்பட்டிருந்த  விஸ்கி போத்தல் பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்ததாகச் சுங்க பிரிவினர் தெரிவித்தனர் .   




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe