Ads Area

விரைவில் திறப்பு விழாக் காணவிருக்கும் சம்மாந்துறை கோட்டக் கல்வி காரியாலயம்.

 ( வி.ரி.சகாதேவராஜா)   


சம்மாந்துறை வலயத்தில் உள்ள சம்மாந்துறை கோட்டக் கல்வி காரியாலயம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.


சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானாவின் வழிகாட்டலில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ. நசீர்  எடுத்த பெருமுயற்சியின் காரணமாக இக்கோட்ட கல்வி காரியாலயம் புதுப் பொலிவு பெற்று சிறப்பாக காட்சியளிக்கின்றது.


அங்கு ஒன்று கூடல் மண்டபம் ஏனைய மண்டபங்கள் மற்றும் கல்விசார் தகவல்கள் மிசன் விஷன் நவீன முறையில் காட்சிப்படுத்த பட்டுள்ளன.


வலயக்கல்விப் பணிமனையின் புதன்கிழமை கல்வி அபிவிருத்தி கூட்டம் பரீட்சார்த்தமாக நடைபெற்றது.


இது தவிர அந்த முழு கட்டிடமே வர்ணப் பூச்சுகளோடும் ஏனைய கல்வி செயற்பாடுகளுக்கு பொருத்தமான காட்சிகளோடும் நவீனம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.


 கோட்டக் கல்வி பணிப்பாளர் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி ஏ.நசீர் தன் அபார முயற்சியில் கட்டிடம் புதுப் பொலிவு பெற்றதை பலரும் பாராட்டி பேசினார்கள்.








 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe