Ads Area

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ; முதல் இடத்தைப் பிடித்த பின்லாந்து ! இலங்கை ?

 உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது முறையாக மீண்டும் 'பின்லாந்து' முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 


அதைத் தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து,  நோர்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.


இதில் இலங்கை 128ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தரவரிசையில் ஒருபடி கீழே உள்ளது.


 இந்தியா இந்த வருடமும் 126வது இடத்திலும், சீனா 60வது இடத்திலும், நேபாளம் 93வது இடத்திலும், பாகிஸ்தான் 108வது இடத்திலும், மியான்மர் 118வது இடத்திலும், பங்களாதேஷ் 129வது இடத்திலும் உள்ளன. 


இஸ்ரேல் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. ஆப்கானிஸ்தான் கடைசி இடமான 137வது இடத்தைப் பிடித்துள்ளது. 


ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த 'Sustainable Development Solutions Network' என்ற நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச மகிழ்ச்சி தினத்தன்று (மார்ச் 20) உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இந்த ஆய்வு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், வாழ்க்கையைத் தேர்வு செய்யும் சுதந்திரம், பெருந்தன்மை, அநீதிகள் மற்றும் ஊழல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வறிக்கைப் பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


ஆசியாவின் மகிழ்ச்சியான முதல் 10  நாடுகள் 


01.சிங்கப்பூர்


02.தாய்வான்


03.ஜப்பான்


04.தென் கொரியா


05.பிலிப்பைன்ஸ்


06.வியட்நாம்


07.தாய்லாந்து


08.மலேசியா


09.சீனா


10.மங்கோலியா




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe