Ads Area

வாகரையில் 7 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 11 வயது சிறுவனும், சிறுவனின் நண்பர்களும் - பிணையிலும் விடுதலை.

மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட்ட 5 பேரில், 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன், 18 வயதுடைய இளைஞரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.


வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கணவனை இழந்த தாயார் ஒருவர் அவரது 7 வயது மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தினமும் வேலைக்கு சென்றுவரும் நிலையில் சிறுமியுடன் விளையாடிய 11 வயது சிறுவன் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.


இதனை தொடர்ந்து குறித்த சிறுவன் 14,15 மற்றும் 18 வயதுடைய சிறுவனின் நண்பர்களும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், இதனை அவதானித்த அந்தபகுதி இளைஞன் ஒருவர் சிறுமியின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து 11 வயதுடைய ஒருவரையும், 14 வயதுடைய இருவரையும் 15 வயதுடைய ஒருவரையும் 18 வயதுடைய ஒருவர் உட்பட 5 பேரை நேற்றைய தினம் (13) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.


இதில் கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 15 வயதுக்குட்பட் 4 சிறுவர்களையும் சட்ட வைத்தியரிடம் சேதனைக்குட்படுத்துமாறும் அடுத்த வழக்கிற்கு ஆஜராகுமாறும் பிணையில் விடுவித்ததுடன் 18 வயதுடையவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


நன்றி - https://www.virakesari.lk




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe