Ads Area

பிரியாவிடை நிகழ்வு - 34 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் சம்மாந்துறை கிராம உத்தியோகத்தர் M.L. தாஸீம்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம உத்தியோகத்தராக கடந்த 2013ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கடமை புரிந்து வந்த எம்.எல் தாஸீம் அவர்கள் தனது 34 வருடகால அரச சேவையில் இருந்து (24)  ஓய்வு பெற்றுள்ளார்.


இவருக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த 24ம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


கிராம சேவை விஷேட தரத்தை சேர்ந்த உத்தியோகத்தரான இவர் 1990ம் ஆண்டு நில அளவை திணைக்களத்தில் பட வரைவாளராக சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர் 1999ம் ஆண்டு  கிராம சேவகர் பரீட்சையில் சித்தியடைந்து கிராம சேவகராக சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றியதோடு 2013ம் ஆண்டு முதல் பதில் நிர்வாக கிராம உத்தியோகத்தராக  கடமையாற்றி இறுதியாக கிராம நிர்வாக பரீட்சையிலும் சித்தியடைந்து நிர்வாக கிராம உத்தியோகத்தராக தொடர்ச்சிகயாக சிறப்பான சேவையினையாற்றி ஓய்வு பெறுகின்றார்.


இக்காலப்பகுதியில் பிரதேச மட்ட காணிப் பிணக்கு குழு, எல்லை மீள் நிர்ணயக் குழு, நகர திட்டமிடல் குழு மற்றும் வீதிகளுக்கு பெயர் சூட்டுதல் போன்ற மிக முக்கியமான பணிகளை ஆற்றியுள்ளார். குறிப்பாக covid 19 காலப் பகுதி, பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார்.


சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால்   ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யூ. எம். அஸ்லம்(LLB), கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமில், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுசைன்,மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே. றினோஸா,பிரதம தலைமை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்  எப்.சாஹினா, காணி உத்தியோகத்தர் எம். சவாஹீர் உட்பட பிரிவுகளின் தலைமை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள்,காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe