Ads Area

"யாவருக்கும் உறையுள் - 2030" எனும் தொனிப்பொருளில் அஸ்மி யாஸீனினால் நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ள 13வது வீட்டுக்கான அடிக்கல் நடு நிகழ்வு.

சம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களின் உறையுள் தேவைக்காக OCD அமைப்பின் தலைவரின் எண்ணக்கருவில் உருவான "யாவருக்கும் உறையுள் - 2030" எனும் தொனிப்பொருளில் நிர்மானிக்கப்படவுள்ள 13ஆவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சனிக்கிழமை (13) மலையடிக்கிராமம் 4 அல்-அக்ஷா பள்ளிவாசல் மஹல்லாக்குட்பட்ட பகுதியில் அமைப்பின் செயலாளர் சரோஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


இவ் அமைப்பின் தலைவரும், விஞ்ஞான முதுமானியும், சமூக சேவகருமான அஸ்மி யாஸீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து அடிக்கல் நாட்டிவைத்தார். 


இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் நஸீர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் றியாஸ், தொழிநுட்ப உத்தியோகத்தர் மொஹம்மட் தம்பி, நூர் பள்ளிவாசல் தலைவரும், அமைப்பின் ஆலோசகருமான அல்-ஹாபிழ் றிப்கான், சம்/மத்திய கல்லூரியின் உப அதிபர் பர்ஸான், கணக்காளர் ஜிப்ரி, அஸ்ஸமா வித்தியாலய அதிபர் அபூபக்கர், ஜனாதிபதியின் இளைஞர் விவகார அமைப்பின் உறுப்பினர் பாஸித், OCD அமைப்பின் செயலாளர் பெரோஸ் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe