பாலமுனை ஸஹ்வா அறபுக்கல்லூரியின் பணிப்பாளர் சபை தலைவர் அஷ்ஷேக் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி, MA அவர்களின் தலைமையில் இன்று 2024.05.22 ஆம் திகதி கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் பதவி ஏற்பு நிகழ்வின் போது புதிய அதிபராக அஷ்ஷேக் AR.றமீன் - (ஸஹ்வி, மதனி) அவர்கள் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இக்கல்லூரியின் பழைய மாணவரான இவர், கடந்த சில வருடங்களாக இங்கு நிறைவேற்று அதிபராகவும் கடமையாற்றியிருந்தார், இவர் பாலமுனை ACJU கிளையின் பொருளாளராகவும் செயலாற்றி வருகின்றார்.
மேலும், இக்கல்லூரியின் பிரதி அதிபராக அஷ்ஷேக் NPM. நஜாத் (றஹ்மானி) அவர்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இவர் இங்கு உப அதிபராக நீண்ட காலமாக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸஹ்வா அறபுக் கல்லூரியின் பணிப்பாளர் சபையால் வழங்கப்பட்ட இப் புதிய அதிபர் மற்றும் பிரதி அதிபர் நியமனமானது அபுஸ் சஹ்வா அஷ்ஷேக் ILM.ஹாசிம் சூரி, மதனி ( ACJU - பிரதித்தலைவர்) அவர்களின் பங்குபற்றுதலுடன் பணிப்பாளர் சபை செயலாளர், பொருளாளர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தகவல்:
சகோ. SH. தம்ஜீத் JP,
பிரதிச் செயலாளர்,
பணிப்பாளர் சபை,
சஹ்வா அறபுக்கல்லூரி,
பாலமுனை.
2024.05.22