மே 23 முதல் ஜூன் 21 வரையிலும் ஹஜ் விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த விதமான விசிட் விசா வைத்திருப்பவர்களும், மக்காவிற்குள் நுழையவோ அல்லது தங்கவோ அனுமதி கிடையாது என சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து வகையான விசிட் விசாக்களுக்கும் ஹஜ் செய்ய அனுமதி இல்லை என்று வலியுறுத்தியுள்ள அமைச்சகம், சவுதி அரேபிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.