(சுஆத் அப்துல்லாஹ்)
மரப்பெட்டி விழுந்ததில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட மரப் பெட்டி ஒன்றை லொரியில் இருந்து வாழைச்சேனையில் வைத்து இரக்கும் போது அது தவறி விழுந்ததில் இளைஞன் ஸ்தலத்திலேயே மரணடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்த இளைஞன் மீராவோடை தபாலகத்தில் பணிபுரியும் இப்றாகீம் என்பவரின் மகனான பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகம்மது றிமாஸ் என்பவராவார்.
மரணமடைந்த இளைஞனின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.