சம்மாந்துறை மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையில் கல்வி கற்ற 2005 O/L Batch பழைய மாணவர்களின் சார்பாக அவர்களின் சொந்த நிதியில் பாடசாலைக்கு அத்தியாவசியத் தேவையாகவிருந்த உபகரணங்கள் சில இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றினைக்கும் நிகழ்வாக இடம் பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டி (Centralian Premier League-2024) நிகழ்வின் போது பாடசாலையின் அதிபர் எம்.டி. முஹம்மட் ஜனோபர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 2005 O/L Batch பழைய மாணவர்களினால் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
15 மின் விசிரிகள் (ceiling fan) மற்றும் 5 வெண்பலகை (White board) என சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களே இவர்களினால் இன்று பாடசாலை அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டது.