சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்.
சம்மாந்துறை முஸ்லிம் மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கிடையிலான 3 நாள் கொண்ட சென்றலியன் பீரிமியர் லீக் 2024 கிரிக்கெட் சுற்றுப்போட்டி சம்மாந்துறை தேசிய பாடசாலை அதிபர் எம்.டி ஜனூபர் தலைமையில் பழைய மாணவர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் கடந்த 21ம் திகதி சம்மாந்துறை தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச் சுற்றுப்போட்டிகளின் இறுதிச் சுற்றுப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடை பெற்றது.
ஜூனியர் ஜம்பியன் ,சீனியர் ஜம்பியன் என இரண்டு வெற்றிக் கிண்ணங்களும் ஜூனியர் ஜம்பியன் சுற்றுப்போட்டியில் 19 அணிகளும் ,சீனியர் ஜம்பியன் சுற்றுப்போட்டி 7 அணிகளும் பங்கு பற்றியிருந்தன.
இச் ஜூனியர் ஜம்பியன் இறுதிச் சுற்றுப்போட்டி 2008 O/L சார்பாக Eight Eagles அணியினருக்கும் 2014 O/L சார்பாக Fourteen Eagles அணியினருக்கும் மிக விறு விறுப்பாக நடைபெற்றது.
இறுதிச்சுற்றுப்போட்டியில் 5 ஓவர்கள் ஒர் ஓவரில் 6 பந்துகள் மொத்தமாக 30 பந்து வீச்சுக்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
முதலில் 2014 O/L சார்பாக துடுப்பெடுத்தாடிய Fourteen Eagles அணி 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் 2008 O/L சார்பாக Eight Eagles அணியினருக்கு 50 ஓட்டங்கள் வெற்றியிழக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய பிரதி கல்வி பணிப்பாளர் பி.பரமதயாளன் கலந்து கொண்டார்.
அக்கரைப்பற்று வலயக் கல்வி பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எல் அப்துல் மஜீட், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கடைசி ஓவரில் இறுதி 1 பந்து வீச்சு பிரதிகளுக்கு 2 ரன்கள் வெற்றியீட்டுவதற்காக Eight Eagles அணியினருக்கு தேவைப்பட்ட போது Eighty Eagles அணியினரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு வெற்றியீட்டியது.
துடுப்பெடுத்தாடிய Eight Eagles அணி 5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 50 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கி கொண்டது.2018 ஆம் ஆண்டின் சென்றலியன் பீரிமியர் லீக் சுற்றுப்போட்டியின் நடப்பு ஜம்பியனாக Fourteen Eagles அணியினர் சுவீகரித்தனர்.அதனை வீழ்த்தி 2024 ம் ஆண்டின் சென்றலியன் பீரிமியர் லீக் சுற்றுப்போட்டியின் நடப்பு ஜம்பியனாக Eight Eagles அணி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத் தொடரில் வெற்றியீட்டிய Eight Eagles அணிக்கு வெற்றிக்கிண்ணமும் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கமும் வழங்கி வைக்கப்பட்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.
ஜூனியர் ஜம்பியன் தொடரின் இறுதி போட்டியின் ஆட்ட நாயகனாக Eight Eagles அணியின் வீரர் ஆசிக் அவர்களும், தொடரின் ஆட்ட நாயகனாக Eight Eagles அணியின் வீரர் இம்தியாஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.