கடற்படையினர் நேற்று (26) கொழும்பில் இருந்து 120 மைல் தொலைவில் மீன்பிடி இழுவை படகை தடுத்து நிறுத்தி, 191 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் ஆகியவற்றை கைப்பற்றினர்.
SLNS நந்திமித்ரா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சிலாபம், இரணைவில மற்றும் தொடுவாவ பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 68 வயதுடைய ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 2572 மில்லியன்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, டிகோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இந்தப் பொருட்களைப் பார்வையிட்டார்.
சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை கடற்படை கோருகிறது.
செய்தி மூலம் - https://www.themorning.lk