Ads Area

மருதமுனை மக்பூலியா பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை : 36 வயது குடும்பஸ்தர் கைது.

 பாறுக் ஷிஹான்.

 

நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மக்பூலியா பகுதியில் நேற்றிரவு (29) கேரளா கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றினை பின் தொடர்ந்து பொலிஸார் பெரும் சிரமத்திற்கு மத்தியில் சந்தேக நபரைக்கைது செய்துள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய குடும்பஸ்தர் என்பதுடன், அவர் வசமிருந்து  11,100 மில்லி கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளனர்.


மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கையெடுத்துள்ளனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe