Ads Area

இவ்வாண்டு ஹஜ் கடமையின் போது மரணித்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு.

2024 ஆம் ஆண்டு ஹஜ்ஜூக் கடமையின் போது இறந்தவர்களின் எண்ணிக்கையை சவுதி சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது 1301 நபர்கள் இறந்துள்ளதாக தெரிவித்தார். இதில் வயதானவர்களும், நீண்ட நாட்களாக நோயில் இருந்தவர்களும் அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.


இதில் 83 சதவிகிதம் பேர் ஹஜ் பெர்மிட் இல்லாதவர்கள். இவர்களுக்கு போதிய ஓய்விடங்கள் இல்லாததாலும், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் நீண்ட தூரம் கடும் வெப்பத்தில் நடந்ததும் காரணம். 


இறந்தவர்களுக்கு அமைச்சர் தனது இரங்களையும் தெரிவித்தார். இறந்தவர்களில் அதிகமானோர் எகிப்து நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe