தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனுசரனையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாடசாலைக்கு ஸ்மார்ட் வேர்ட் கையளிக்கும் நிகழ்வு நேற்று (22) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் அம்பாறை வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கமு/சது/ அல் அர்ஷத் மகா வித்தியாலயத்திற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவினால் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவிடம் ஸ்மார்ட் வோர்ட் கையளிப்பு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை அல் அர்ஷத் மகா வித்தியாலய அதிபர் எஸ்.அப்துல் ரஹீம்,முன்னாள் அமைச்சர் தயா கமகே உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.