(வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்ப்பிரிவு கோரக்கோயில் ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு சடங்கு அண்மையில் (21) வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது .
சுமார் ஆயிரம் பக்தர்கள் தீமிதிப்பில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் தீமிதிப்பு சடங்கு கடல் நீர் எடுத்து வந்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று பத்தாம் நாள் இன்று 21 ஆம் தேதி தீ மிதிப்பு சடங்கு நடைபெற்றது.
ஆலய பிரதம பூசகர் முருகேசு ஜெகநாதன் தலைமையில் சடங்குகள் இடம் பெற்றுவந்தன.