இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் நியமனத்தின் அடிப்படையில் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் நிரந்தர புதிய வைத்திய அத்தியட்சகராக சம்மாந்துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஐ.சிறாஜ் அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர், தற்போது சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் பதில் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

