தேசிய வாசிப்பு மாதம்- ஒக்டோபர்.
2024 தேசிய வாசிப்பு தினமானது "உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" எனும் தொனிப்பொருளின் கீழ் அனைத்து நூலகங்களிலும் விஷேட வேலைத்திட்டங்களை நடைமுறை படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சம்மாந்துறை வீரமுனை வாசிப்பு நிலையமும் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
*தொனிப்பொருள் சம்பந்தமான பல்வேறு வாசிப்பு போட்டிகளை ஏற்பாடு செய்தல்.
*குறிப்பிட்ட அதிகார எல்லைக்குள் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் வீட்டு நூலகத்தை ஆரம்பிப்பதற்கு ஏற்ற செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தல்.
*இதுவரை நூலகத்தோடு இணையாத வாசகர்களை இணைத்தல்.
*வாசிப்பு தொடர்பான விஷேட செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
*வாசகர்களின் படைப்புக்களை காட்சிப்படுத்த மன்றங்களை அமைத்தல்.
இன்னும் பல செயற்பாடுகளோடு இவ் வருடத்திற்கான வாசிப்பு மாதம் ஆரம்பிக்கவுள்ளது.. ஆகவே சம்மாந்துறை பகுதியில் உள்ள மாணவர்கள், வாசகர்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கி இவ்வருட வாசிப்பு மாதத்தை சிறப்பிக்க பங்களியுங்கள்..
மேலும்.
பிறந்த நாள் பரிசாக நூல்களை அன்பளிப்புச் செய்தல், புத்தகக் கண்காட்சியை நடத்துதல், புத்தக நன்கொடை தினமொன்றை அறிமுகம் செய்தல், வாசிப்பின் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கிலான போட்டிகளையும் விரிவுரைகளையும் ஏற்படுத்துதல், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல், வாசிப்பு முகாம்களை ஒழுங்குபடுத்தல், வாசிப்பு முகாம்களை நடத்துதல் போன்ற மேலதிக செயற்பாடுகளையும் வாசகர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யவும் எதிர்பார்க்கின்றோம்.
வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும்.