(அகமட் கபீர் ஹஷான் அஹமட்)
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கிடையிலான 3 நாட்கள் கொண்ட சென்ட்ரலியன் பிரிமியர் லீக் 2024 சீசன் 2 கிரிக்கெட் சுற்றுப்போட்டி சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய அதிபர் எம்.டி.ஜனூபர் தலைமையிலும் பழைய மாணவர்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும் கடந்த 21ம் திகதி சம்மாந்துறை தேசிய பாடசாலையின் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச் சுற்றுப்போட்டிகளின் இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது.
சீனியர் சாம்பியன் ,ஜூனியர் சாம்பியன் என இரண்டு வெற்றிக் கிண்ணங்களும் ஜூனியர் சாம்பியன் சுற்றுப்போட்டியில் 19 அணிகளும் ,சீனியர் சாம்பியன் சுற்றுப்போட்டி 7 அணிகளும் பங்கு பற்றியிருந்தன.
இதில் சீனியர் சாம்பியன் இறுதிச்சுற்றுப்போட்டிக்கு 2002 O/L சார்பாக Quick Riders அணியும் 2004 O/L சார்பாக Eagle Spaikers அணியும், ஜூனியர் சாம்பியன் இறுதிச் சுற்றுப்போட்டிக்கு 2008 O/L சார்பாக Eight Eagles அணியினருக்கும் 2014 O/L சார்பாக Fourteen Eagles அணியினருக்கும் நடைபெற்றது.
இத் தொடரில் சீனியர் சாம்பியனாக 2004 O/L சார்பான Eagle Spaikers அணியும் ஜூனியர் சாம்பியனாக 2008 O/L சார்பான Eight Eagles அணியும் வெற்றி பெற்றதுடன், வெற்றிக்கிண்ணமும் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கமும் வழங்கி வைக்கப்பட்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் பி.பரமதயாளன் அவர்களும் அதீதியாக அக்கரைப்பற்று வலயக் கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல் அப்துல் மஜீட் அவர்களும் பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.நியாஸ் அகமட் அவர்களும் பாடசாலையின் பிரதி அதிபர் உட்பட பழைய மாணவர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.