இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியாவின் பதில் நீதவான் நுவரெலியா பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மே 31 அன்று நுவரெலியா தேயிலை தோட்டத்தில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தை அச்சுறுத்தியதாகவும் தொண்டமான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று (22) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நுவரெலியா பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் எவரும் ஆஜராகாததையடுத்து, தோட்ட நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வழக்கு விவரங்களை நீதிமன்றில் முன்வைக்குமாறு கோரினர்.
இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய தொண்டமான் மற்றும் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk