சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் 2013 O/L மற்றும் 2016 A/L கற்ற மாணவர்களை ஒன்றிணைத்த '97 Born Centralians அமைப்பினால் எமது பாடசாலையில் நீண்டகால தேவையாக காணப்பட்ட பரிதி வட்டம் வீசுதல் மற்றும் குண்டு போடுதல் ஆகிய இரு மைதானங்கள் சர்வதேச தரத்தை ஒத்த ரீதியில் சுமார் ஒரு லட்சம் ரூபா நிதி செலவில் செப்பனிடப்பட்டு பாடசாலைக்கு உத்தியோகபூர்வமாக கையளித்து வைக்கும் நிகழ்வு இன்று (22.07.2024) இடம்பெற்றது.
மேற்படி மைதான செப்பனிடல் மூலம் எமது பாடசாலை மாணவர்களின் விளையாட்டு அடைவுகள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற தூரநோக்குடன் முழுக்க முழுக்க '97 Born Centralians அமைப்பின் அங்கத்தவர்கள் மூலமாக பெறப்பட்ட நிதி அன்பளிப்பை கொண்டு இவ்விரு மைதானங்களும் மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பாரிய வேலைத்திட்டத்திற்காக வெளிநாடு, உள்நாடுகளில் இருந்து நிதியுதவிகளை வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்வதோடு இத்திட்டத்தை செவ்வனே நிறைவேற்ற ஒத்துழைப்பபு வழங்கிய அனைத்து '97 Born Centralians அங்கத்தவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் மிக நேர்த்தியான முறையில் இம் மைதானங்களை செப்பனிட வேண்டும் என முன் நின்று தனது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கிய எமது பாடசாலையின் பழைய மாணவரும் விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான ஸக்கீ அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இக்கையளிப்பு நிகழ்வில் எமது பாடசாலை அதிபர், பிரதி அதிபர், விளையாட்டு ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் '97 Born Centralians அமைப்பின் அங்கத்தவர்கள் என ஏராளமனோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.