பாறுக் ஷிஹான்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நாய்பட்டிமுனை உப அஞ்சல் அலுவலகம் 2024.04.02ம் திகதி தொடக்கம் நற்பிட்டிமுனை உப தபாற்கந்தோர் எனப்பெயராக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலினூடாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அஞ்சல் அலுவலக உயரதிகாரிகளின் கவனத்திற்கு நற்பிட்டிமுனை அனைத்துப் பள்ளிவாசல் தலைவர் ஜெ.எம்.றிஸான் (ஹாமி) உட்பட நிர்வாகிகள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து 2024.05.31ம் திகதி வர்த்தமானி அறிவித்தலினூடாக குறித்த பெயர் மாற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி குறித்த உப தபாற் கந்தோரின் பழைய விளம்பரப்பலகை அஞ்சல் மாஅதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமாரவின் உத்தரவிற்கமைய அகற்றப்பட்டு புதிய விளம்பலகை தற்போது பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இனிவருங்காலங்களில் நற்பிட்டிமுனை உப தபாற்கந்தோர் என அழைக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த செயற்பாட்டை முன்னெடுத்த நற்பிட்டிமுனை அனைத்துப்பள்ளிவாசல் தலைவர் உட்பட பலருக்கு நற்பிட்டிமுனை பொதுமக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.