கல்முனை யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் நீண்ட நாள் தேவையாக இருந்த வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதித் தேவையினை முன்வைத்து பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
இதன் போது பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்கள் வழங்கிய வாக்குறுதின் அடிப்படையில் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களின் சொந்த நிதியின் மூலமாக 300,000 பெறுமதியான காசோலையினை இன்றைய தினம் நாபீர் பவுண்டேஷன் தலைமை காரியாலயத்தில் வைத்து ECM நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் MI அப்துல் மஜீட் அவர்களினால் யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் MM மர்சூக் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.