2023 காலப்பகுதியில் சுக வனிதையர்களுக்கான சேவை வழங்குதலில் (well women programme) நாடளாவிய ரீதியில் உள்ள உள்ள 354 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் முதல் 14 இடங்களினுள் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தினால் 2024.07.16 ஆம் திகதி கொழும்பு UCFM மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது வழங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் செயலாளர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.
தேசிய விருதொன்றினைப்பெற்று பிராந்தியத்தின் பெருமையை மேலோங்கச் செய்தமைக்காக நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் இதற்காகன உழைத்த உத்தியோகத்தர்களுக்கு கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
ஊடகப்பிரிவு.