மாளிகைக்காடு செய்தியாளர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரேயொரு சிறுவர் இல்லமான சம்மாந்துறை அஸ்ஸலாம் சிறுவர் இல்லத்தை மேம்படுத்தி நவீன முறையில் அமைக்க முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.முகம்மட் ஹரீஸ் அவர்களின் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டில் நான்கு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை அஸ்ஸலாம் சிறுவர் இல்ல நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.முகம்மட் ஹரீஸ் நேரடியாக அச்சிறுவர் இல்லத்திற்கு விஜயம் செய்து அங்கிருக்கும் சிறுவர்களிடம் கலந்துரையாடியதுடன், நிர்வாகிகளிடமும் கலந்துரையாடினார்.
இதன்போது தனது நிதியொதுக்கீட்டுக்கான ஆவணத்தை நிர்வாகத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கையளித்தார்.
இந்நிகழ்வில், சம்மாந்துறை சிறுவர் நிலைய பொறுப்பதிகாரி எம்.சி.எம்.சிப்கான், பாராளுமன்ற உறுப்பினரின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர் உட்பட சம்மாந்துறை அஸ்ஸலாம் சிறுவர் இல்ல முகாமைத்துவக்குழுவினர், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.