Ads Area

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 21, 26, 28 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள்.

 பாறுக் ஷிஹான்.


ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம், கல்முனை புறநகர்ப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (22) அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான அதிகாரிகள் கடற்கரைப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 3 நபர்களை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்ததுடன், கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.


இவ்வாறு கைதானவர்கள் 21, 26, 28 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன், 520, 980, 530 மில்லி கிராம்கள் ஐஸ் போதைப்பொருட்கள் சந்தேக நபர்கள் வசமிருந்து மீட்கப்பட்டுள்ளன.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே போதைப்பொருள் நுகர்தல் மற்றும் விற்பனை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe