(அகமட் கபீர் ஹஷான் அஹமட்)
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் நிர்மாணிக்கப்படவுள்ள நுழைவாயிலிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய அதிபர் எம்.டீ. முஹம்மட் ஜனூபர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நுழைவாயிலிற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி (நிர்வாக) பிரதிக்கல்வி பணிப்பாளர் பி.எம்.வை. அரபாத் முகைதீன், சம்மாந்துறை மஜ்லீஸ் அஸ்-சூறா தலைவரும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான அஷ்ஷேக் எம்.ஐ. அமீர் (நளீமி), சம்மாந்துறை உலமா சபை தலைவர் மௌலவி எம்.எல்.எச்.பஷீர் (மதனி), திருகோணமலை மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எம்.எம். மஹ்ரூப் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஏ.ஆர். நியாஸ் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.