Ads Area

இனியாச்சும் பழசுக்கு மாறுவம் வாங்க....வாழை இலை விருந்து😋

அப்படி என்ன இருக்கு இந்த வாழை இலைல சாப்பிர்றதுல... பழங்காலங்கள் தொட்டு இருந்து வரும் இந்த வாழையில சாப்பிடுறதுல பல நன்மைகள் விஞ்ஞானரீதியா நமக்கும் நம்மல சுற்றி இருக்குற சூழலுக்கும் இருக்கு  என்டு சொன்னா நம்புவிங்களா??


நாம இப்ப அனேகமாக அலுமினியம் இறப்பர் பிளாஸ்டிக் செரமிக் போன்றதால ஆன பாத்திரங்கள் தான் அதிகம் பயன்படுத்துறம் இப்படி பட்ட பாத்திரங்கள்ல கூடிய காலங்கள் சாப்பிடக்க அதில இருக்குற சில கனிமங்கள் நம்மட உடம்புக்கு சென்று புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகுது என்டும் இப்படி பட்ட சில உட்காத இறப்பர்கள் பிளாஸ்டிக் போன்றவை சூழலுக்கு அதிகமாக குப்பைகளாக அகற்றப்படுது என்டும் பல ஆய்வுகள் சொல்லியிருக்காங்க. 


முன்னைய காலங்கள்ல இருந்த ஆட்கள பார்த்த எப்படியும் ஒரு 80 85 வயசு வர சும்மா பம்பரம் மாதிரி இருந்து இருப்பாங்க ஆன இப்பய ஆட்கள் ஒரு 60 தான்டுறது என்பது எட்டாக்கனி தான் என்ன காரணம் என்டு பார்த்த நம்மட பழக்கவழக்கங்கள் தான் தொற்றா நோய்க்கு காரணமாக போயிட்டு அப்பய ஆட்கள் நல்ல சுத்தமா சுகாதாரமா இயற்கையாக உட்கொண்டு வளர்ந்தாங்க .


ஆனா இப்ப எல்லாத்துலயும் கலப்படம் எல்லாத்துலயும் இரசாயனம் அதான் பிரச்சினை.


வாழைல இலைல சாப்பிடுறதுல இருக்குற நன்மை.


1. Biodegradable and Eco Friendly


வாழை இலை இலகுவாக உட்கக் கூடியது நாம சாப்பிட்டு வீசு எறியும் இந்த வாழை இலை குப்பையால எந்த வொரு சூழல் மாசடைதலோ எதுவுமே இருக்காது இலகுவாக உட்கலடைந்து மண்ணோட மண்ணாகி பசளையாகிடும்.


2. Multiple Dishes using to One leaf and Waterproof.

 

வாழைல இலைல நமக்கு ஏற்றபோல அளவுல வெட்டி நாம அத பயன்படுத்துறதால அதிளவான கறி சோறு போன்ற பல வகை உணவுகளை ஒரே இலைல வைத்து பரிமாறலாம் அதிகமா பாத்திரங்கள் தேவைப்படாது கழுவனும் என்டு நேரம் வீணாகவும் போகாது. அதோட வாழை இலை நீரை அகத்துறிஞ்சாதது என்ட தால மேசைக்கும் இலைக்கும் இடையில சாப்பாடுகள்ல இருக்குற நீர்த்தன்மை மேசைக்கு செல்லாது தடுக்கும்.


3.Natural Flavour Enhancing.


அடுத்தது நாம சாப்பாடுல ருசிய அதிகரிக்க எவ்வளவோ சுவையூட்டிகள் சுவைமெருகூட்டிகளல சாப்பாட்டுல சேர்க்கம் அவ்வளவும் தனிக் கெமிகல் எல்லாம் ஏதோ ஒரு நோயக் கொண்டு வரும் . ஆனா வாழை இலைல சுடச்சுட சாப்பாடு போட்டு உண்ணக்க அந்த சூட்டுல வாழை இலைல இருக்குற சுவையும் நறுமணமும் அப்படியே சாப்பாட்டுல சேர்ந்து இயற்கையா ஒரு நறுமணம் சுவை வரும்.


4. Antioxidant.


வாழை இலைல இயற்கை ஒட்சியேற்ற எதிரி (Antioxidant)என்டு சொல்லப்படுகின்ற Polyphenols இருக்கு இது நம்மலோட சாப்பாடுகள்ல சேர்ந்து உடலுக்கு செல்வதால உடம்பில  ஒட்சியேற்ற செயன்முறைகள் நன்றாக நடக்கும்.


5.Natural Disinfectant and Providing Against to Food Borne Disease.


இயற்கையாக வாழை இலைல Antimicrobial Properties அதாவது பக்ரீறியாக்கள கொல்ல கூடிய Substance காணப்படுவதால அவை நம்மட உணவு ஊடாக போறதால பக்ரீறியா தொற்றுக்கள் தடுக்கப்படும் அத்தோட பாக்டீரியா ஊடான உணவு நஞ்சாதல் தடைப்படும்.

 

6. Nutritional Value.

 

வாழை இலைல இதுகள தவிர இன்னும் விற்றமின் சீ மற்றும் விற்றமின் ஏ போன்ற கனிமங்கள் அதிகளவு காணப்படுகின்றது இவை உணவு ஊடாக பரிமாற்றம் அடைந்து போசணை அதகரிக்கும்.


7. Boosts Digestion Non Toxicity.

 

மற்ற மற்ற பாத்திரங்கள்ல சாப்பிடுறத விட வாழை இலை சாப்பிடுறதால உணவு சாமிபாடு மற்றும் அகத்துறிஞ்சல் நன்றாக நடைபெறுவதாகவும் இதற்கான Enzyme ஊக்கிகள் இயற்கையாகவே வாழை இலைல இருந்து உணவுக்கு கடத்தப்பட்டு உடலுக்கு செல்வதாகவும் பல ஆய்வுகள் கூறியிருக்கு.. அதோட எந்தவொரு நஞ்சுப் பொருட்கள் இல்லாததால உடலுக்கும் சிறந்தது.


பண்டைய கால எந்தவொரு பழக்கவழக்கங்களும் ஒரு விஞ்ஞானரீதியானதே.... காலங்கள் மாற மாற பண்பாடு பழக்கவழக்கங்களை மாற்ற கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த வாழை இலை விருந்து.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe