2024 ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தேசிய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இன்று காலை 09.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரையிலான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் போது 39 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை கையளித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 03 ஆட்சேபனைகள் கிடைத்திருந்தன.
பத்தரமுல்லை சீலரதன தேரரால் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை குறிப்பிடாமல் ஒரு ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு எதிராக இரண்டு ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றன.
எனினும், ஆட்சேபனைகளை பரிசீலித்த தேர்தல் ஆணைய உறுப்பினர்கள், தேர்தல் சட்ட விதிகளின்படி, ஆட்சேபனைகளை நிராகரிக்க ஏகமனதாக முடிவு செய்தனர்.
இந்நிலையில், இன்று வேட்புமனுக்களை கையளித்த 39 வேட்பாளர்களும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
39 வேட்பாளர்களில் 22 பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும், ஒருவர் மற்ற கட்சிகளையும், 16 சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்ந்தவர்கள் என தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
திலித் ஜயவீர, ஏ.எஸ்.பி லியனகே, சரத் பொன்சேகா, நுவன் போபகே, ஓஷல ஹேரத், ஜானக ரத்நாயக்க, சிறிபால அமரசிங்க, அரியநேந்திரன், நாமல் ராஜபக்ஷ, விஜயதாச ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர். செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.