Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலாளர் SL. முஹம்மது ஹனீபா அவர்கள் சீனா பயணம்!

 "ஈ-வர்த்தகம்(E-Commarce)  எனும் கருத்திலான சர்வதேச பயிற்சி பட்டறை எதிர்வரும் ஆகஸ்ட் 29 தொடர்க்கம் செப்டம்பர் 11 வரை சீனாவின் செங்டு சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெறுகிறது. 


இதில் கலந்து கொள்வதற்காக அம்பாறை மாவட்டத்தில் இருந்து 2 பிரதேச செயலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அதில்  சம்மாந்துறை பிரதேச செயலாளரரும் ஒருவராவார்.


அரசாங்கத்தின் உரிமய தேசிய வேலைத் திட்டத்தில் தேசிய ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் சிறப்பாக செயற்பட்டவர்கள் என்ற வகையில் இந்த தெரிவு இடம்பெற்று இருக்கின்றது. என்பது குறிப்பிடத்தக்கது விடயமாகும்.


மேலும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா இலங்கை நிர்வாக சேவையில் 18 வருட அனுபவத்தை கொண்ட தரம் 1 உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe