650 கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்கு கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 52 வயதான கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடற்படை மற்றும் பொலிஸாரினால் புத்தளம் வீதித் தடுப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், தொலைபேசிகள் மற்றும் வாகனத்துடன் மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
செய்தி மூலம் - https://www.themorning.lk