Ads Area

தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு துண்டுப் பிரசுரம்.

 பாறுக் ஷிஹான்


தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்வரும் ஜனாதிபதி   தேர்தலை முன்னிட்டு   துண்டுப் பிரசுரம் ஊடாக அம்பாறை மாவட்டங்களின் பல பிரதேசங்களில் பிரசாரங்களில்  ஈடுபட்டிருந்தது.


இதற்கமைய கடந்த 22 ஆந் திகதி வியாழக்கிழமை  முதல் கொண்டு இன்று (26) வரை  ஒலுவில்  கல்முனை சாய்ந்தமருது நிந்தவூர் மருதமுனை நற்பிட்டிமுனை மாளிகைக்காடு பெரிய நீலாவணை  உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்றும் அங்குள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்றும் தமது பிரசாரங்களை முன்னெடுத்தனர்.


மேலும் நாடு அனுராவோடு அவரின் வெற்றியில் நாமும் பங்காளியாக இருப்போம். வாரீர் மாற்றத்தை நோக்கி பயணிப்போம்  வளமான நாடு அழகான வாழ்க்கை என பிரச்சார துண்டுப்பிரசுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் வீடு வீடாக செயற்பாட்டாளர்கள்  விநியோகித்து வருகின்றனர்..


தோழர் அனுரா திசாநாயக்கவின் வெற்றியை  இந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் ஊடாக உறுதிப்படுத்த இவ்வாறான செயற்பாட்டில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  வசந்த பியதிஸ்ஸ உட்பட  கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா மற்றும்  தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து   மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe