Ads Area

பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் சாரதிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

 பாறுக் ஷிஹான்


தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் சாரதிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


 "பிள்ளைகளின் பாதுகாப்பு சாதிகளின் கைகளிலே" எனும் தொனிப் பொருளில் தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகார சபையின்  மாவட்ட சமுக உளநல அதிகாரி யூ. எல். அசார்டீன் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.


இதன் போது  கல்முனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனை தமிழ் பிரிவிலுள்ள பாடசாலை சேவையில் ஈடுபடும் 40 மேற்பட்ட  சாரதிகள் கலந்து   கொண்டனர்.


 கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி வழிகாட்டலில்   நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் நெறிப்படுத்தலில் கல்முனை தலைமையக   பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரிகள் மற்றும் கல்முனை பிரதேச செயலக  சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.


மேலும் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும்   சாரதிகளுக்கான 1929 ஸ்டிகர்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.இது தவிர பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் சாரதிகள் குறைநிரைகள் ஆராயப்பட்டதுடன் கருத்துக்கள் ஆலோசனைகள் என்பனவும் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe