Ads Area

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ - பொதுஜன பெரமுன கட்சி உத்தியோகபூர்வ அறிவிப்பு.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்த அறிவிப்பை விடுத்தார்.


ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான நிகழ்வு, பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது.


இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ஷ உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe