Ads Area

ஹக்கீம், ரிஷாத் ஏமாற்றுத்தலைமைகள் : கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் - பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சுவரொட்டிகள்.

 பாறுக் ஷிஹான்.


“ஏமாற்றுத்தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்” என்ற சுவரொட்டிகள் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.


இலங்கையின் 9வது ஜனதிபதித்தேர்தல் செப்டெம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 


ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க அம்பாறை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்ப்புகள் எழுந்த வண்ணமுள்ளன.


ரவுப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது ஆதரவினை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியிருந்தனர்.


மேலும், கிழக்கில் ஏமாற்றுத்தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாமென்ற சுவரொட்டிகளும் கிழக்கு மாகாணத்தில் பரவலாக ஓட்டப்பட்டுள்ளது. 


முஸ்லிம் அரசியல் தலைமைகளான ஹக்கீம் மற்றும் ரிஷாத் அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஏமாற்று அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், சுயநல அரசியல் ஒழிய வேண்டுமென்றும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


எனினும், இவ்வாறான துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதன், பின்னணியில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களான கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe