தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எல்பிட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வேன் டயர் வெடித்ததால் நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 12 பெரியவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். காயமடைந்தவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கதிர்காமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.