(ஏ.பி.எம். இம்றான்)
2030 ஆண்டின் யாவருக்கும் உறையுல் (வீடற்ற மக்களுக்கான வீடு) என்னும் தொனிப்பொருளில் ஒ சி டி அமைப்பினுடைய தலைவர் சமூக சேவகர் விஞ்ஞான முதுமாணி அஸ்மி யாசீன் அவர்களுடைய தலைமையில் நேற்று (08) 12வது வீட்டின் நிர்மாணிப்பணி நிறைவு பாவனையாளருக்கு கையளிப்பு.
சம்மாந்துறை பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக வீடற்ற ஏழ்மை மக்களுக்கு வீடு வழங்கும் வேலை திட்டத்தினை மிக நீண்ட காலமாக இப்பாரிய பணியினை அஸ்மி யாசீன் என்ற இளைஞன் மிக நீண்ட காலமாக செய்து வருகின்றார் 2030 ஆண்டளவில் முடியுமான அளவு வீடற்ற ஏழைகளுக்கான வீட்டினை நிர்மாணித்து அவர்களுக்கு வழங்கும் தூர சிந்தனையை மையமாக கொண்டு பயணிக்கும் இவ் இளைஞனின் மற்றுமொரு மைக்கல்லாக நேற்று (08) 12 வது வீடு கையளிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் 11 வீடுகளை மக்களிடத்திலே கையடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 12வது வீட்டினை தெரிவு செய்யப்பட்ட பாவனையாளருக்கு கையளிக்கப்படும் நிகழ்வு செந்நெல் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டின் முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது நிகழ்வுக்கு உலமாக்கள் , கல்விமான்கள், புத்திஜீவிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் அஸ்மி யாசீன் உரையாற்றுகையில் என்னால் முடிந்த வரை நான் செய்கிறேன் கடந்த காலங்களில் பதினொரு வீடு வழங்கி விட்டேன். 12-வது வீடு இன்று வழங்கப் படுகின்றது 13-ஆம் 14 ஆம் வீடுகள் நிர்மாணப் பணிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது 2030 வரை இந்த பணியினை மிக சிறப்பாக செல்வதற்கான பல்வேறு வியூகங்கள் வகுத்து இலக்கை அடைய நம்பிக்கை தெரிவித்தார் அஸ்மி யாசீன்.