Ads Area

உடலுறவுக்கு பணம் வசூலித்த மனைவி.. மாதமொரு முறை மட்டும் "உறவு".. கணவன் எடுத்த முடிவு.. விழித்த கோர்ட்

வித்தியாசமான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்துள்ளது.. இதற்கு முதலில் என்ன தீர்ப்பு சொல்வதென்றே தெரியாமல், கோர்ட்டே குழம்பி போய்விட்டதாம்.. அப்படியென்ன நடந்தது தைவானில்? தைவானை சேர்ந்தவர்கள் அந்த இளம் தம்பதியினர்.. இவர்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனால் கல்யாணமாகி 2 வருடங்கள்தான் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு, தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வெடித்துள்ளது.. இதனால், 3வது வருடமே அவர்களுக்குள் சண்டையும், தகராறும் வர தொடங்கியது.


அடிக்கடி தகராறு வந்ததால், இவர்களுக்குள் உறவுகொள்ளும் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது... கணவரிடம் உடலுறவு கொள்ள மனைவிக்கு பிடிக்கவில்லை அதேசமயம், கணவரை விட்டு செல்லவும் மறுத்து வந்துள்ளார். அந்தவகையில், கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு, உடலுறவு கொள்வதை முற்றிலுமாக தவிர்த்துள்ளார். அதாவது, கணவருடன் சேர்ந்தும் வாழாமல், அவரை பிரிந்தும் செல்லாமல், அவருக்கு மன உளைச்சலை தந்து வந்ததாக தெரிகிறது..


இதற்கு நடுவில் தன்னுடைய கணவரை பற்றி, தன்னுடைய சொந்தக்காரர்களிடம், தரக்குறைவாக பேசி வந்துள்ளார்.. என்னுடைய கணவர் இப்போதெல்லாம் உடல் எடை அதிகமாகிவிட்டார்.. திறமையற்று இருக்கிறார் என்றெல்லாம் புகார் சொல்லி கொண்டே இருந்தார்.. இதைக்கேள்விப்பட்டு, மிகவும் நொந்துபோனார் கணவர்.. அதனால், நேராக கோர்ட்டுக்கு போய்விட்டார்.. மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார்.


இந்த விஷயம் தெரிந்ததுமே மனைவி, கணவனிடம் சென்று, "இனி அப்படியெல்லாம் பேச மாட்டேன்.. உங்களிடம் சரியாக நடந்து கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.. இதை கேட்டதுமே கணவனுக்கு ஏகப்பட்ட சந்தோஷமாகிவிட்டது. உடனே அந்த வழக்கை திரும்ப பெற்றுவிட்டார்.. அத்துடன் மனைவி பெயரில் சொத்துகளையும் மாற்றிவிட்டார்.. அதேபோல, மனைவியும் கணவனிடம் உறவு கொள்ள தொடங்கினார்.. ஆனால் கடந்த 2021ம் ஆண்டிற்கு பிறகு, கணவருடன் உடலுறவு கொள்வதற்கு காசு வாங்கினாராம்.. ஒவ்வொரு முறையும் உறவு கொள்வதற்கும், தன்னிடம் பேசுவதற்கும், ஒவ்வொருமுறையும் பணம் வாங்கியிருக்கிறார்.. ஒவ்வொருமுறையும் $15 அதாவது ரூ.1200 வாங்கியதாக கூறப்படுகிறது.


ஒருகட்டத்தில், கணவனுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார்.. ஏதாவது தேவை என்றால், மெசேஜிங் ஆஃப்கள் மூலமாக மட்டுமே பேசுவாராம்.. இதனால் நொந்துபோன கணவர், மறுபடியும் கோர்ட்டுக்கு ஓடினார்.. மறுபடியும் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில்,"எனது மனைவி 2017-ம் ஆண்டில் இருந்து மாதம் ஒரு நாள் மட்டும் தாம்பத்திய உறவுக்கு அனுமதிக்கிறார். 2019-ம் ஆண்டில் இருந்து எந்தவித காரணமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக தாம்பத்திய உறவை நிராகரித்துவிட்டார். 2021-ம் ஆண்டில் இருந்து தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள ஒவ்வொரு முறையும் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தார். பேசுவதற்குகூட கட்டணம் கேட்கிறார். ஆனால் அவரது உறவினர்களிடம் நான் அதிக எடையுடன் இருப்பதாகவும், ஆண்மையற்றவன் என்றும் கூறியிருக்கிறார்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


ஆனால், மனைவியோ, தனக்கு விவாகரத்து வேண்டாம் என்று பதில் மனு தாக்கல் செய்தார்.. இதையெல்லாம் கேட்ட நீதிபதியோ,, ஒருகணம் அப்படியே உட்கார்ந்துவிட்டாராம்..


இந்த உறவை சரிசெய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்று சொல்லிவிட்டாராம்.. மனைவி தாக்கல் செய்த மனுவை மட்டும் தள்ளுபடி செய்திருக்கிறார். அத்துடன், கணவர் கேட்ட விவாகரத்தையும் வழங்கி உத்தரவிட்டார். அதிரடி தீர்ப்பு இதனால் அதிர்ந்து போன மனைவி, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ஆனால் அங்கேயும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது... எனினும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல், இப்போது இன்னொரு கோர்ட்டுக்கு சென்றுள்ளார் மனைவி.. தாய்வானில் 2014-ம் ஆண்டும் இப்படித்தான், ஒரு பெண் தனது கணவரிடம் உறவுக்கு 60 டாலர் வசூலித்து வந்தாராம்.. கணவர் தன்னையும், தனது குழந்தைகளையும், கவனித்துக்கொள்ளவில்லை என்று அந்த மனைவி குற்றம்சாட்டினார்.. எ குடும்பத்திற்கு எந்தச் செலவும் செய்யாததாலேயே அவருடைய மனைவி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதுபோல், அந்த தம்பதியின் குழந்தைகளும், தங்களிடம் பேச விரும்பினால் பணம் கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தனர்.. இறுதியில், இந்த வழக்கில் போலீசார் தலையிட்டதில், குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 600 டாலர் (ரூ.50,402) தருவதற்கு அந்த கணவர் சம்மதித்தாராம்.. அதனுடன் அந்த வழக்கும் முடிவுக்கு வந்தது. ஆனால், தற்போது நடந்துள்ள சம்பவம், சற்று வித்தியாசமானது.. கணவரிடமிருந்து மனைவி பணம் வாங்கி விவாகரத்தாகியிருப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe