குவைத்தின் அப்பாசியாவில் தங்கி குவைத் அல்-இசா மெடிக்கல் அண்ட் எக்யூமென்ட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்த இந்தியா கேரளா மாநிலம் றாநீ பகுதியை சேர்ந்த தாமஸ் என்கிற தம்பி (வயது 56) கடந்த வியாழக்கிழமை இரவு விமானத்தில் வைத்து உயிரிழந்தார்.
இவர் கடந்த ஆகஸ்ட் 8, 2024 குவைத்தில் இருந்து கொச்சிக்கு குவைத் ஏர்வேஸில் பயணம் செய்த போது திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக விமானம் துபாயில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார்.
பின்னர் உடல் துபாயில் உள்ள மருத்துவமனை பிணவறைக்கு மாற்றப்பட்டு, விமானம் கொச்சிக்கு புறப்பட்டது. செப்டம்பர் 14 அன்று தாமஸ் அதே விமானத்தில் கொச்சியில் இருந்து குவைத் திரும்ப டிக்கெட் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.