இந்திய இளைஞர் கொலை வழக்கில் சவுதி குடிமகன்கள் 4 பேர் உட்பட 5 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இந்தியர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். கொலை செய்யப்பட்ட நபரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஜுபைலில் ஷரியா நீதிமன்றத்தில் அண்மையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது. திருச்சூர், செனிகப்புரத்தைச் சேர்ந்த நேஷம் சித்தீக், சவுதி குடிமக்களான ஜாபர் பின் சாதிக் பின் காமிஸ் அல் ஹாஜி, ஹுசைன் பின் பக்கீர் பின் ஹுசைன் அல் அவாத், இத்ரீஸ் பின் ஹுசைன் பின் அகமது அல் சமீல் மற்றும் ஹுசைன் பின் அப்துல்லா பின் ஹாஜி அலி ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட சூழ்நிலைகள் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2016 சமீர் என்பவரை பணத்தை கேட்டு மிரட்டி கடுமையாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது திட்டமிட்ட கொடுரமான கொலை என்பதால் மேல் முறையீடு நீதிமன்றம், சவுதி மன்னர் ஆகியோர் மற்றும் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் கருனை மனுவை நிராகரித்த நிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.