Ads Area

கொரோனா ஜனாஸா கட்டாய எரிப்பு : பக்கச்சார்பற்ற விசாரணை கோரி காத்தான்குடியில் கையெழுத்து வேட்டை.

எம்.எஸ்.எம்.நூர்தீன்.


கொரோனா காலத்தில் ஜனாஸாக்களை கட்டாய தகனஞ்செய்தமை தொடர்பாக  பக்கச்சார்பற்ற முறையில் விசாரணை நடாத்த வேண்டும்ர்ன வலியுறுத்தி  காத்தான்குடியில் கையெழுத்து பெறும் நடவடிக்கை நேற்று (03) சனிக்கிழமை இடம்பெற்றது.


தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் இக்கையெழுத்து பெறும் நடவடிக்கையை மேற்கொண்டது.


34வது வருட சுஹதாக்கள் ஞாபகார்த்த தினம் நேற்று (3) காத்தான்குடியில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், இக்கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது.


கொவிட் 19 கொரோனா தொற்று நிலவிய காலப்பகுதியில் முஸ்லிம்களுடைய ஜனாசாக்கள் கட்டாயமாக தகனஞ்செய்யப்பட்டது.


இது தொடர்பாக அரசாங்கம் நீதியான விசாரணையொன்றை நடத்தி தகனஞ்செய்ய காரணமானவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்திய மகஜர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பதற்காக அம்மகஜரில் கையெழுத்து பெறும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது.


தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் சட்டமாணி முகம்மட் றுஸ்வின் தலைமையில் இக்கையெழுத்து பெறும் நடவடிக்கை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாயல் முன்பாக மேற்கொள்ளப்பட்டது.


காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் மற்றும் தேசிய சுஹகாக்கள் ஞாபகார்த்த நிறுவனமும் இணைந்து ஜனாதிபதியிடம் இக்கோரிக்கை அடங்கிய மகஜாரைக் கையளிக்கவுள்ளதாக தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவரும் சமூகச் செயற்பாட்டாளருமான சட்டமாணி முகம்மட் றுஸ்வின் தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe