Ads Area

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு பொலிஸாரும் இரு பெண்களும் பலி.

 பாறுக் ஷிஹான்.


அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நால்வர்   உயிரிழந்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம், நாமல் ஓயா பகுதியிலுள்ள கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரினால் இத்துப்பாக்கிச்சூடு  இன்று (4) அதிகாலை 02.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இச்சம்பவத்தில் இக்கினியாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி மற்றும் மாமி ஆகியோர் உயிரிழந்ததுடன், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் தனது துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இதேவேளை, மொனராகலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குள் உள்ளடங்கும் கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவம் குடும்பப்பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதா? அல்லது இதர காரணங்களினால் இடம்பெற்றதா? என்பது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe