சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில், இறந்த நபர் ஒருவரின் உடலை படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பரப்பிய குற்றத்திற்காக இந்தோனேஷியாவைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனிநபர் உரிமைக்கு ஊறு விளைவித்ததற்காகவும், நாட்டின் சைபர் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களை மீறியதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதே போன்ற ஒரு குற்றத்தை செய்ததற்காக கடந்த மாதம் பங்களாதேஷைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இறந்த உடலை முகம் மறைத்த நிலையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். பிறர் அனுமதியின்றி ஒருவரை படம் பிடித்தால் 5 லட்சம் ரியால் அபராதமும் ஒரு வருடம் சிறை தண்டனையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவில் வாழும் தமிழர்கள் இது தொடர்பில் அவதானமான இருக்குபடி வேண்டுப்படுகின்றீர்கள்.