சவுதி அரேபியா ரியாத் நகரில் போலிச் சான்றிதழ்களோடு தொழில்சார் அங்கீகாரம் பெறாமல் தொழில் செய்த பொறியாளர் ஒருவருக்கு சவுதி குற்றவியல் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையும் 50,000 SR அபராதமும் விதித்தது. பொறியாளரை பணியமர்த்திய நிறுவனத்திற்கு SR100,000 அபராதத்தையும் நீதிமன்றம் விதித்தது.
சவுதி அரேபியாவில் உள்ள இன்ஜினியரின் கவுன்சில் மேற்கொண்ட ஆய்வுச் சுற்றுப் பயணத்தின் போதே மேற்குறித்த நபர் போலி இன்ஜினியர் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.